நரிப்பொங்கல் கொண்டாடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை- வனத்துறை எச்சரிக்கையால் கிராம மக்கள் அதிருப்தி

x

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வங்காநரியை பிடித்து நரிப்பொங்கல் கொண்டாடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாழப்பாடி பகுதி கிராமங்களில் பொங்கல் பண்டிகையை நிறைவு செய்யும் வகையில் கரிநாள் அன்று வயல் வெளிகளில் சுற்றித்திரியும் வங்கா நரியை பிடித்து வந்து தெய்வமாக வணங்கும் நரிப்பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், வங்காநரியை பிடித்து வந்து பொங்கல் கொண்டாடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தங்கள் பாரம்பரிய விழாவான நரிப்பொங்கல் விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்