குலதெய்வ கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்

x

மகா சிவராத்திரியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குலதெய்வ கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார்.

காட்டுபரமக்குடியில் உள்ள அய்யனார் திருக்கோயிலுக்கு நடிகர் வடிவேலு வருகை புரிந்தார். சமீபத்தில் அவரது தாயார் மறைந்ததால், கோயிலுக்குள் செல்லாமல், வாசலிலேயே நின்று சாமி தரிசனம் செய்தார். இதையறிந்து கோயிலுக்கு வந்த பொதுமக்கள், வடிவேலுவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்