டைரி மில்க் சாக்லேட்டில் புழு... தீயாய் பரவிய வீடியோ... அனைத்து மளிகை கடைகளிலும் ரெய்டு

x
  • டைரி மில்க் சாக்லேட்டில் புழு இருந்ததாக வீடியோ வெளியானது குறித்து, உளுந்தூர்பேட்டையில் உள்ள மளிகை கடையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
  • உளுந்தூர்பேட்டையில் உள்ள மளிகை கடையில் வாங்கிய டைரி மில்க் சாக்லேட்டில், புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டார்.
  • சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உளுந்தூர்பேட்டையில் பத்துக்கும் மேற்பட்ட மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
  • அப்போது, குளிர்சாதன பெட்டியில் சாக்லேட்கள் வைக்கப்படுகின்றனவா?, காலாவதியான சாக்லேட் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து சோதனை செய்தனர்.
  • குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரிக்காமல் இருந்த 25 சாக்லேட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  • மேலும், உளுந்தூர்பேட்டையில் உள்ள டைரி மில்க் நிறுவனத்தின் ஏஜென்சி அலுவலகத்திலும், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்