உக்ரைனின் பிரம்மாண்ட எரிபொருள் கிடங்கு அழிப்பு - தாக்குதல் நடத்தி அழித்ததாக ரஷ்யா தகவல்

x

மத்திய உக்ரைனில் சுமார் 1 லட்சம் டன் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் விமான படைகளுக்கு எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்பட்ட பிரம்மாண்ட எரிபொருள் கிடங்கு செர்காசி பிராந்தியத்தில் உள்ள ஸ்மிலா கிராமத்திற்கு அருகே அமைந்திருந்தது. இந்நிலையில், இந்த எரிபொருள் கிடங்கை தங்கள் படைகள் தகர்த்து அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்