MGR பாணியை கையிலெடுக்கும் உதயநிதி?..ரசிகர்களின் நிலை என்ன? கலைக்கப்படுகிறதா?

x

இந்த இரண்டும், உதயநிதி ஸ்டாலின், அமைச்சராகும் முன்னும், பின்னும் பேசிய காட்சிகள்தான். மேடை இரண்டாக இருந்தாலும், மாமன்னன் படத்திற்கு பின்னர், தான் நடிக்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் உதயநிதி....

தன் தொடக்க கால சினிமாவில் உதயநிதி ஸ்டாலின், ரெட்ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, producer ஆக மட்டுமே வலம் வந்தார்.

சூர்யா நடித்த ஆதவன் படத்தின், இறுதி காட்சியில் வேலைக் காரன் வேடத்தில், நடித்திருந்தார் உதயநிதி. அதுதான் அவர் நடிகனாக அறிமுகமான முதல் படம்.

இதன் பின்னர் 2012ம் ஆண்டில் "ஒரு கல், ஒரு கண்ணாடி" திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அப்போதே அவருக்கு தமிழகமெங்கும் ரசிகர் மன்றங்கள் துவங்கப்பட்டன.

இன்று பள்ளிகல்வித்துறை அமைச்சராக இருக்கும், அன்பில் மகேஷ் , அந்த ரசிகர்மன்றங்களை ஒருங்கிணைத்து நிர்வாகிக்கும் பொறுப்பை செய்து வந்தார்...

அப்போது ரசிகர் மன்றமாக மட்டும் இருந்தவர்கள், தேர்தல் நேரத்தில் திமுகவிற்காக கட்சிப்பணி செய்யத் தொடங்கி னார்கள்.

அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருவெறும்பூர் மற்றும், உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியிலும் ரசிகர் மன்றங்கள் களத்தில் இறங்கி வேலை செய்தனர்.

மழை வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில், உதயநிதி தன் கட்சிக்காக வெளியிட்ட அறிக்கை, ரசிகர் மன்றத்தையும் சேர்த்தே கட்டுப்படுத்தியது.

தற்போது வெளிப்படையாகவே நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். இவ்வாறாக கட்சிப்பணி, சினிமாப்பணி இரண்டையும் ஒரு சேர சேர்த்து செய்து வருகின்றனர் உதயநிதியின் ரசிகர்கள்.

விளையாட்டுதுறை அமைச்சராகும் முன், தொகுதி மக்களுக்காக உழைக்க வேண்டி இருப்பதால், நடிக்க நேரமில்லை என தெரிவித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு இந்த முடிவை, மாற்றிக்கொள்வார் என அவரது ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதியோ மீண்டும் தன் முடிவை உறுதிசெய்தார்.

இதனால், அவரது ரசிகர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் அதிமுகவில் ஒரு அணியாக தொடர்ந்ததை போல், உதய நிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றமும் திமுகவின் அணியாக தொடருமா? அல்லது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு அவர்கள் முழு நேர அரசியலில் ஈடுபடுத்தப்படுவார்களா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்