"தாக்கரே என்ற பெயரை யாராலும் திருட முடியாது" - முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி

x
  • தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தான், உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.
  • இது குறித்து மும்பையில் உள்ள சிவசேனா கட்சியின் அலுவலகத்தில், உத்தவ் தாக்கரே தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
  • பின்னர் செய்தியாளர்களை உத்தவ் தாக்கரே, தம்மிடம் கட்சியின் பெயர், சின்னம் திருடப்பட்டாலும், தாக்கரே என்ற பெயரை யாராலும் திருட முடியாது என்றார். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஜனநாயக படுகொலை என தெரிவித்தார்.
  • தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர், தேர்தல் ஆணையர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
  • தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தை நாடி இருப்பதாக தெரிவித்த அவர், உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்