டிவிட்டரின் புதிய சி.இ.ஓ. இவரா? தன்னைத்தானே கிண்டல் செய்யும் எலோன் மஸ்க் | twitter | elon musk

x

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து சர்ச்சைகளை கிளப்பி வரும் எலான் மஸ்க், புதிய அறிவிப்பை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். அந்த வகையில் தனது வளர்ப்பு நாயான Floki-யின் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த எலான் மஸ்க், டிவிட்டரின் புதிய சி.இ.ஓ. என அறிவித்துள்ளார். புகைப்படத்தில் இருக்கும் நாய் சி.இ.ஓ. என குறிப்பிடப்பட்ட ஆடையை அணிந்திருப்பதுடன், அதன் முன்பு டிவிட்டர் தொடர்பான ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. மற்றொரு பதிவில் முன்னால் இருந்த சி.இ.ஓ.வை விட இந்த சி.இ.ஓ. சிறப்பானவர் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்