டிவிட்டர் போஸ்டுக்கு லிமிட்? - எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி

x

டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம்? என்ற விவரங்களை எலான் மஸ்க் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும் மற்றும் புதிய சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளையும் படிக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்