இரட்டை குழந்தைகள்.. ஆனால்..! பிறந்தது வெவ்வேறு ஆண்டுகளில்...

x

இரட்டை குழந்தைகள்.. ஆனால்..! பிறந்தது வெவ்வேறு ஆண்டுகளில்...


அமெரிக்காவில், ஆறு நிமிட வித்தியாசத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள், இரு வேறு ஆண்டுகளில் பிறந்துள்ளன. டெக்சாஸ் மாகாணத்தின் டென்டன் நகரில், களி ஜோ ஸ்காட் என்ற பெண்ணிற்கு, 2022 டிசம்பர் 31 இரவு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இதில் முதல் குழந்தையான ஆனி ஜோ. டிசம்பர் 31 இரவு 11.55 மணிக்கு பிறந்தார். இரண்டாவது குழந்தையான எஃபி ரோஸ், ஆறு நிமிடங்கள் கழித்து, 2023 ஜனவரி ஒன்றாம் தேதி அதிகாலை 12 ஒன்றுக்கு பிறந்தார்.


Next Story

மேலும் செய்திகள்