அண்ணாமலை அன்று போட்ட டுவிட் - இன்று அமைச்சர் பொன்முடி வீட்டில் அதிரடி காட்டும் ED

x

அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் பொன்முடியை முதல்வர் பதவி நீக்கம் செய்வாரா? என அண்ணாமலை கடந்த மாதமே டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நிலையில், பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 19-ஆம் தேதி, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்தார். அதில், கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியில், கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுவது குறித்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததை சுட்டிக்காட்டியிருந்தார். அரசுக்கு சுமார் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் அமைச்சர் பொன்முடியை முதல்வர் பதவி நீக்கம் செய்வாரா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி​ தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்