12 நாட்களாக ஒரே இடத்தில் இருக்கும் நல்ல பாம்பு - பால் வைத்து பூஜை செய்து வழிபடும் மக்கள்

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 12 நாட்களாக ஒரே இடத்தில் இருக்கும் நல்ல பாம்புக்கு பால் வைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். தாடி நொளம்பை கிராம்ம் அருகே சித்தேரி ஏரிக்கரையில், ஒரே இடத்தில் நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது. 12 நாட்களாக அதே இடத்தில் இருப்பதால், பாம்பின் தலையில் குங்கும‌ம் வைத்தும், பால் வைத்தும் அப்பகுதி மக்கள் நாள்தோறும் வழிபட்டு செல்கின்றனர். பாம்பை சிவனாகவும், அம்மனாகவும் நினைத்து வழிபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்