தமிழக அரசுக்கு, டிடிவி தினகரன் முக்கிய கோரிக்கை

x

புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதுடன், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, பேருந்துகளை இயக்க பாரபட்சமின்றி பணி வாய்ப்புகளை வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால், கோடை விடுமுறைக்கு மக்கள் வெளியூர்களுக்கு பயணிக்க முடியாமல் திண்டாடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்