அதிவேகத்தில் பைக்கில் பறந்ததால் சர்ச்சையில் சிக்கிய TTF வாசன், ஜி.பி.முத்து

x

டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து யூ டியூப் பிரபலம் டிடிஎஃப் வாசனுடன் பைக்கில் பறந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... மின்னல் வேகத்தில் பைக்கில் பறந்து 2 கே கிட்ஸ்களைக் கவர்ந்த யூ டியூபர் டிடிஎஃப் வாசன், டிக் டாக் பிரபலம் ஜிபி முத்துவை பைக்கில் அமர வைத்து அதிவேகத்தில் பைக்கை ஓட்டி அலற விட்டார்... டிடிஎஃப் வாசனைக் இறுகக் கட்டிக் கொண்டு ஜிபி முத்து பயணித்த இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... இருப்பினும், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் இதுபோன்ற அதிவேகம் ஆபத்து என்பதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்