ஆபத்தான முறையில் படியில் பயணம்...கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை | chengalpattu

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு நகர பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் என 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகிறது. செங்கல்பட்டு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பொதுமான பேருந்துகள் இயக்கப்படாததால், ஆபத்தான முறையில் மாணவ, மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்