சிக்கிய ரகசிய ஆவணங்கள் - டிரம்ப்-க்கு 100 ஆண்டுகள் சிறை..?

x

மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ட்ரம்பிற்கு எதிராக சமீப காலமாக பல சர்ச்சைகள் சுழன்று வருகின்றன. 2017 முதல் 2021ம் ஆண்டுவரை அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப், கடந்த அதிபர் தேர்தலில் பைடனிடம் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய போது, அவர் பல ரகசிய ஆவணங்களை ஆவண காப்பகத்திடம் ஒப்படைக்காமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள ட்ரம்பின் மார்-ஏ-லாகோ வீட்டில் இருந்து சுமார் 13 ஆயிரம் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர். அமெரிக்க அணுசக்தித் திட்டம், அமெரிக்க இராணுவ ரகசியங்கள், உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாக 37 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 13ம் தேதி இதுகுறித்த விசாரணைக்கு மியாமி நீதிமன்றத்தில் அவர் ஆஜராகிறார். குற்றம் நிரூபணமானால் அவருக்கு 100 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், குற்றப் பத்திரிக்கையில், ட்ரம்ப் ரகசிய ஆவணங்களை குளியல் அறை உட்பட வீட்டின் பல பகுதிகளில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்