நடிகர் விஜய்-க்கு டிராபிக் போலீசார் அறிவுறுத்தல்

x

அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, 500 ரூபாய் அபராத தொகையை நேற்று மாலை ஆன்லைன் வாயிலாக விஜய் கட்டினார்.

இது குறித்து நடிகர் விஜய் தரப்பிடம் கேட்டபோது, ரசிகர்களின் கூட்டம் அடிக்கடி சூழ்ந்து கொள்வதாகவும், இதனால் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்கவும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக, விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை பரிசீலித்தபின் விதிமுறைகளை மீறக்கூடாது என்றும், வேண்டுமென்றால் தற்காலிக கருப்பு திரைகளை அமைத்துக் கொள்ளுமாறும் நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து போலீசாரால், அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்