தக்காளி சட்னி-ஐ தொடர்ந்து 'தக்காளி சாதம்' விற்பனை நிறுத்தம்

x

தக்காளி விலை ஏற்றம் அனைவரையும் பாதித்துள்ள நிலையில், சிறு உணவகங்களையும் விட்டு வைக்கவில்லை. பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறிய உணவகத்தில் தினமும் தக்காளி சாதம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தக்காளி விலை ஏற்றத்தால் மற்ற கலவை சாதங்களை மட்டும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தக்காளி சாதத்தை விரும்பி சாப்பிடுபவர்கள், வேறு வழியின்றி மற்ற சாத வகைகளை வாங்கிச் செல்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்