இன்றைய தலைப்பு செய்திகள் (20-10-2022) | 9 PM Headlines

x

அதிரடி அபராதம் - புதிய விதிகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் ஆயிரம்... செல்ஃபோன் பேசிக்கொண்டே ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்...

மதுபோதையில் வாகனம் வாகனம் ஓட்டினால், உடன் பயணிப்பவர்களுக்கும் அபராதம்...

வரும் 28ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவிப்பு...

-------------------------------

எம்.எல்.ஏ. அலுவலகங்களில் இ-சேவை மையம்

234 சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் இன்று தொடக்கம்...

மேசைகள், கணினி உள்ளிட்டவைகளையும் வழங்கினார், முதலமைச்சர் ஸ்டாலின்...

-------------------------------

நவ.1-ல் கிராமசபை கூட்டம்

உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடும் வகையில், வரும் நவம்பர் ஒன்றாம் தேதி கிராமசபை கூட்டம்...

அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சிகள் நடத்தவும், தமிழக அரசு இன்று உத்தரவு...

-------------------------------

7.5% இட ஒதுக்கீடு - மருத்துவ கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில், 7 புள்ளி 5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் இன்று கலந்தாய்வு...

மருத்துவராகும் கனவு நனவான அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகம்...

-------------------------------

"ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க வேண்டும்"

நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க வேண்டும்...

குஜராத்தில் சுற்றுச்சூழல் வாழ்க்கை முறை கருத்தரங்கை தொடங்கி வைத்து பிரதமர் மோடி இன்று பேச்சு...

-------------------------------

பிரிட்டன் பிரதமர் ராஜினாமா

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் இன்று ராஜினாமா...

தான் தேர்வு செய்யப்பட்டதற்கான இலக்கை அடைய முடியவில்லை எனவும் அறிவிப்பு...

-------------------------------


Next Story

மேலும் செய்திகள்