இன்றைய தலைப்பு செய்திகள் (18-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம் என தொண்டர்களுக்கு இன்று எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்...

மக்கள் நலன் காக்க, மாநில உரிமை மீட்க, துணிந்து நடை போடுவோம் என்றும் திட்டவட்டம்...

25 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என்று அமித்ஷா கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் இன்று பேட்டி...

அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை என்றும் பதிலடி...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 21ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்...

உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விவரங்களைப் பெற்ற அமலாக்கத்துறையினர்...

கடினமான சூழலை ஒற்றுமையாக நின்று எதிர்கொள்வதுதான் இந்தியாவின் மிகப்பெரிய பலம்...

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பெருமிதம்...

தமிழக ஆளுநர் மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகார்...

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம்...

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று இன்று அசத்தல்...

உலக டூர் சூப்பர் 1000 (Thousand) பேட்மிண்டன் தொடரின் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்றும் சாதனை...

கொடுங்கையூர் போலீசார் கைது செய்து விசாரணை...


Next Story

மேலும் செய்திகள்