இன்றைய தலைப்பு செய்திகள் (09-03-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி இன்று அறிவிப்பு...

2வது முறையாக நிராகரிக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் பேட்டி...

ஆளுநர் மீது குற்றம்சாட்டினால் மக்கள் ஏற்கமாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து...

ஆளுநர்களுக்கு வாய் தான் உண்டு, காதுகள் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காட்டம்...

எதிர்க்கட்சிகளை வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது எனவும்

பரபரப்பு குற்றச்சாட்டு...

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை...

பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று தகவல்...

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம்

வட மாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்பப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சூழ்ச்சி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று குற்றச்சாட்டு...

வதந்தி பரப்பிய புகாரில் 3 பேர் கைதாகி இருப்பதாக டிஜிபி சைலேந்திர பாபு தகவல்...

விவசாயிகளுக்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு...

24 மணி நேரமும் வழங்குமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தகவல்...

தருமபுரி மாவட்டம் மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறை பொருட்களை சேதப்படுத்திய விவகாரம்...

5 மாணவ, மாணவிகளை 5 நாள் இடைநீக்கம் செய்து கல்வித்துறை இன்று அதிரடி உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்