13 நிமிடத்தில் 49 செய்திகள்... தந்தி மாலை எக்ஸ்பிரஸ் (28.02.2023)

x

13 நிமிடத்தில் 49 செய்திகள்... தந்தி மாலை எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi Short News (28.02.2023)

'ஏற்றமிகு ஏழு' திட்டத்தின் கீழ், காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் நடைமுறையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

52 ஆண்டு காலம் அரசியலுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன்..'ஏற்றமிகு ஏழு' திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

"தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்"... "காலை 8.30 மணிக்கு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணப்படும்" - மாவட்ட ஆட்சியர் தகவல்

வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து, ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்...

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் நடைமுறைக்கு கால நீட்டிப்பு வழங்கப்படாது...இன்று மாலையுடன் அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்...

நெல்லை, தென்காசி மாவட்டங்களில், மின்சாரம் மற்றும் ஆதார் இணைப்பு நடைமுறை நிறைவு..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் அவரது புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்....


Next Story

மேலும் செய்திகள்