Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-02-2023) | Morning Headlines | Thanthi TV

x

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் மிக நலமாக இருப்பதாக, உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்...உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் என்றும் உறுதி...

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றனர்...அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார்...

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களால் தமிழர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது...தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பவர்லூம் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

நிலையிலேயே இருப்பதற்காக தேரை செய்வதில்லை... அதுபோல, காகிதத்திலேயே இருப்பதற்காக திட்டங்களை தீட்டுவதில்லை...சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....

தமிழகத்தில் உள்ள வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி அவசர ஆலோசனை...திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையை தொடர்ந்து, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்....

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்-களில் ரூ.75 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம்...6 காவலர்கள் ஆயுத படைக்கு பணியிட மாற்றம்...

கோவை நீதிமன்றத்தில் இளைஞர்கள் இருவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் கொலை வெறித் தாக்குதல்....ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், பகீர் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு....

விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் மாயமான விவகாரம்...4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை...

மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு...உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு ஏற்க மறுப்பு...


Next Story

மேலும் செய்திகள்