இன்றைய தலைப்பு செய்திகள் (03-07-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

உச்ச நீதிமன்றத்தில் மேகதாது தொடர்பான வழக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்....அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று உறுதி...

சென்னையில் நாளை முதல் 82 ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படும் என இன்று அறிவிப்பு...தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தகவல்...

தேர்தலுக்கு 300 நாட்களே உள்ள நிலையில் பொது சிவில் சட்டத்துக்கான அவசரம் என்ன?டெல்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் சாலை மற்றும் மேம்பால பணிகளை முடிக்க வேண்டும்...சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஆய்வு கூட்டத்தில், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவுறுத்தல்...

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரஃபுல் பட்டேலை praful patel நீக்கி, சரத் பவார் இன்று அதிரடி உத்தரவு...அனைத்தும் தங்களுக்கே சாதகமாக முடியும் எனவும் நம்பிக்கை...கட்சியின் பெரும்பான்மை பலம் தங்கள் வசமே இருப்பதாக, உரிமை கோரும் அஜித் பவார்...

நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் நடிகர் விஜய் களமிறங்க உள்ளதாக இன்று தகவல்...விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என்றும் எதிர்பார்ப்பு...


Next Story

மேலும் செய்திகள்