Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-09-2023) | Morning Headlines | Thanthi TV

x

அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லி வந்தனர்...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க, அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என உறுதி...

ஜி20 மாநாட்டில் ரஷ்யா, சீனா தடைகளை மீறி பொது பிரகடனம் நிறைவேற்றப்படுமா என எதிர்பார்ப்பு...கூட்டமைப்பில் 21ஆவது நாடாக தென் ஆப்பிரிக்கா சேர்க்கப்படும் எனவும் தகவல்...

ஜி-20 உச்சி மாநாடு, மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கு புதிய பாதை வகுக்கும் என பிரதமர் மோடி உறுதி..இந்தியாவின் விருந்தோம்பலை சிறப்பு விருந்தினர்கள் ரசிப்பார்கள் என்றும் கருத்து...

ஜி 20 மாநாட்டையொட்டி உலக தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு இன்று விருந்து அளிக்கிறார், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு...விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இன்று காலை டெல்லி செல்கிறார், தமிழக முதல்வர் ஸ்டாலின்...

குடியரசு தலைவர் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அழைக்கவில்லை என ராகுல்காந்தி குற்றச்சாட்டு...எதிர்க்கட்சித் தலைவரை ஆட்சியாளர்கள் மதிக்கவே இல்லை எனவும் விமர்சனம்...

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...இந்தியாவை பாதுகாக்கவே திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டதாகவும், தற்போது, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்து வந்துள்ளதாகவும் பேச்சு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உத்தரவிட்டும், உரிமையை நிலைநாட்ட திமுக அரசு தவறி விட்டது...தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நடை பயணத்தின்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு...

விஜயலட்சுமி புகார் தொடர்பாக, இன்று காலை நேரில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன்...வெளியூர் செல்ல இருப்பதால் செவ்வாய்கிழமை ஆஜராவதாக சீமான் தரப்பு தகவல்...

முதல்வர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அடுத்த மாதம் 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்...அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்