Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2023) | Morning Headlines | Thanthi TV

x

திருவண்ணாமலையில் இன்று திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்...நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு...

வருகிற 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்கிறார், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி....முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்தநாள் மற்றும் 61வது குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவிப்பு...

எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வாய்ப்பே இல்லையென டிடிவி தினகரன் திட்டவட்டம்.....துரோகத்தின் மூலம் அதிமுகவை கைப்பற்றியுள்ளதாகவும் விமர்சனம்.....

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு நவம்பர் 3ம்​தேதி வரை நீதிமன்ற காவல்....பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த புகாரில் கைதான நிலையில், தாம்பரம் நீதிமன்றம் உத்தரவு.....

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி தொடர் விடுமுறை எதிரொலி...சொந்த ஊர் புறப்பட்ட பொதுமக்களால் தாம்பரம், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்...

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மழைநீர் வடிகால் பணி நிறைவு ...வாகன நெரிசல் குறைந்து, இரவிலேயே போக்குவரத்து சீரானது ...


Next Story

மேலும் செய்திகள்