Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-11-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-11-2023) | Morning Headlines | Thanthi TV
  • தீபாவளியைக் கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுத்த பயணிகள்....கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவு 7 மணி முதல் பேருந்துக்காக காத்திருப்பதாக பயணிகள் வேதனை.........
  • கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனப் புகார்.. குடும்பத்தினர், குழந்தைகளுடன் கால் கடுக்க காத்திருப்பதாக பயணிகள் வேதனை....
  • "முன்பதிவு செய்யாமல் மக்கள் வந்தாலும் கூடுதல் பேருந்துகள் தயார்..." கோயம்பேட்டில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர் தகவல்...
  • தீபாவளி பண்டிகைக்காக அரசுப் பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 6 ஆயிரம் பேர் சொந்த ஊர் பயணம்... அரசுப் பேருந்துகளில் முன்பதிவு அதிகரித்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் பேட்டி.....
  • சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுத்த பயணிகளால் பல்லாவரம் - திருநீர்மலை, ஜி.எஸ்.டி.. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. சென்னை ஓஎம்ஆர் சாலையில் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி....
  • தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புத்தாடை, பட்டாசுகள் வாங்க குவிந்த மக்கள்... கடை வீதிகளில் களை கட்டியது விற்பனை...
  • தீபாவளியை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்... போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார், மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர்...
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்.. புத்தாடை, பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம்..
  • ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு... பயணிகளிடம் போக்குவரத்து இணை ஆணையர் நேரடி விசாரணை...
  • உலகக்கோப்பையில் காலை 10.30 மணிக்கு புனேவில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகள் மோதல்.. பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் பலப்பரீட்சை

Next Story

மேலும் செய்திகள்