Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2023) | Morning Headlines | Thanthi TV
x
  • 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் ​ஸ்டாலின் திறந்து வைத்தார் ... புதிதாக அமைக்கப்பட்டுள்ள கேலரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டது...
  • அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.. இன்று வேட்பு மனுதாக்கல் தொடக்கம்...
  • அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அதிமுக சார்பில் மனு... பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக விரோதிகளால் களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார்...
  • அவசரமாக பொதுச் செயலாளர் தேதியை அறிவித்து, அதிமுகவில் புதிய சட்டத்தை ஈ.பி.எஸ் எழுதுகிறார்... ஓ.பி.எஸ் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணன் குற்றச்சாட்டு...
  • சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலையில் பலத்த மழை... கிண்டி, அடையாறு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பெய்தது...
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கோடை மழை... தென்காசி அருகே கடையநல்லூர் பகுதியில் மின்னல் தாக்கியதால் தென்னை மரம் தீ பிடித்தது...
  • தமிழகத்தில் வரும் 20ம்தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....
  • தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில், பி.எம்.மித்ரா மெகா ஜவுளிப் பூங்கா அமைவதாக அறிவிப்பு... பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி...
  • பால் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என பால்வளத் துறை அமைச்சர் நாசர் உறுதி... எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால், ஒரிரண்டு சங்கத்தினர் மட்டுமே போராட்டம் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு...https://youtu.be/H2kPx7UsE-M




Next Story

மேலும் செய்திகள்