Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-03-2023) | Morning Headlines | Thanthi TV

x

ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறான தகவல்...

இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், நோட்டீஸ் பிறப்பித்தவர் சஸ்​பெண்ட் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்...


தமிழகத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வட மாநிலத்தவர்...

சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உற்சாகம்...


வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோவை வெளியிட்ட நபர் மன்னிப்பு கோரினார்...

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் யாதவ் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு...


தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்காக, ஜெயலலிதாவை போலவே, தனது முடிவுகளும் இருக்கும் என அண்ணாமலை உறுதி...

கூட்டணியில், பாஜக ஜூனியர் பார்ட்னராக இருக்காது எனவும், தேசிய கட்சியின் மேனேஜராக செயல்பட மாட்டேன் என்றும் விளக்கம்...


சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக திமுகவுடன் ஓ.பி.எஸ் உறவு வைத்திருக்கிறார்...

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்...


மகளிர் தினத்தையொட்டி, இன்று மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை இலவசமாக பார்க்கலாம்..

மும்பையில் நடைபெறும் குஜராத், பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டிக்கெட் கிடையாது என அறிவிப்பு...


இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாதில் துவங்குகிறது...

ஆஸ்திரேலிய பிரதமருடன் இணைந்து, போட்டியை நேரில் காண பிரதமர் மோடி திட்டம்...


Next Story

மேலும் செய்திகள்