Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-02-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-02-2023) | Morning Headlines | Thanthi TV
x
  • தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் 6 பேர் காயம்... படகில் இருந்த என்ஜின், தூண்டில், ஜிபிஎஸ் கருவியை பறித்துச்சென்றதாக மீனவர்கள் குற்றச்சாட்டு...
  • நடுக்கடலில் தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்... தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்...
  • கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு..... ஓபிஎஸ் தரப்பினரின் மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி...
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக, தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க மாட்டேன்... அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி...
  • திமுகவின் பி-டீமாக செயல்பட்டவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.... பொதுக்குழு தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஓ.பி.எஸ் மீது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
  • திமுகவுக்கு "B" டீமாக யாரும் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி... எடப்பாடி பழனிசாமியின் பலவீனமான தலைமைதான் திமுகவின் வெற்றிக்கு காரணம் என்றும் விளக்கம்...
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் முறையிடுவோம்.... தந்தி டிவி பேட்டியில், ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தகவல்....
  • எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர், எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் மறந்து விட்டதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் கொளத்துர் கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு... ஜெயலலிதாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இறக்கியதை கொண்டாடுவதாகவும் விமர்சனம்...
  • நாளை ஈரோடு செல்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்... காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்...
  • அதிமுக நடிகர்களின் கட்சி என அமைச்சர் பொன்முடி விமர்சனம்... எல்லா கட்சிகளிலும் நடிகர்கள் இருக்கிறார்கள் எனவும் கருத்து...




Next Story

மேலும் செய்திகள்