Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-12-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-12-2022) | Morning Headlines | Thanthi TV
x

குஜராத்தில் 3 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் புதிய வகை கொரோனா .... சீனாவை ஆட்டிப்படைக்கும் ஒமிக்ரான் BF.7 வைரஸ் இந்தியாவிலும் பரவியது...

ஜீனோம் சோதனையை அதிகரிக்குமாறு, மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில் பரிந்துரை... கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுரை...

சீனா, ஹாங்காங் நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்... மத்திய சுகாதார இயக்குனரகத்திற்கு தமிழக பொது சுகாதாரத் துறை கடிதம்...

கொரோனா காரணமாக சபரிமலை தரிசனத்தில் எந்த பாதிப்பும் இல்லை என கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்... தேவைப்பட்டால் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அறிவிப்பு...

கொரோனா தொற்று குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை... சீரம் தடுப்பூசி நிறுவன சிஇஓ ஆதர் பூனாவாலா கருத்து...

சென்னையில் நள்ளிரவில் கடும் பனிப்பொழிவு... தி.நகர், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் புகை சூழ்ந்தது போல காணப்பட்டது...

மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஒட்டம்... மொழி அழிந்தால் இனமும் அழிந்து விடும்... தமிழ் இசை ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு....

புதுச்சேரி அரசு பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு... தமிழிசை என பெயரை வைத்துக் கொண்டு தமிழை அழிக்கும் வேலையில் ஆளுநர் ஈடுபடுவதாகவும் விமர்சனம்...

பாடப்புத்தகங்களில் வேதங்கள், பகவத் கீதை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாற்றை சேர்க்க வேண்டும்... என்.சி.இ.ஆர்.டி-க்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

வருகிற 24ஆம் தேதி நடைபெறுகிறது, நடிகர் விஜயின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.... சிறப்பு வீடியோவை பகிர்ந்து படக்குழு அறிவிப்பு...




Next Story

மேலும் செய்திகள்