Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-09-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-09-2022) | Morning Headlines | Thanthi TV
x

அரசுக்கு நல்ல ஆலோசனைகள் கூறும் அனைவரும் முதல்வர்கள் தான்... எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்...

அக்டோபர் 2-வது வாரத்தில் திமுக பொதுக்குழு கூட வாய்ப்பு... உட்கட்சித்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்பார்ப்பு...

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றார்... பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனுவாக அளிக்க திட்டம்...

தங்கள் சாதியை சேர்ந்தவர்தான் முதல்வராக முடியும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு... இதுதான் அதிமுகவின் நிலை எனவும் விளக்கம்...

மின்கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்... திருச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...

இந்துக்கள் பற்றிய சர்ச்சை விவகாரத்தில், எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்...? திமுக எம்.பி., ஆ.ராசா, மிகக் கடுமையாக கேள்வி...

இறைவன் முன் அனைவரும் சமம்... யாருக்கும் முதல் மரியாதை கிடையாது... உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து...

வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து புகை பிடித்த சாமியாரால் பரபரப்பு.... பேஸ்புக்கில் நேரலை செய்தவரை மடக்கிப் பிடித்தது காவல்துறை....

சென்னையில் ஸ்விகி நிறுவன ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்.... புதிய விதிகளை அறிமுகப்படுத்தி ஊக்கத்தொகையை நிறுத்துவதா என எதிர்ப்பு...







Next Story

மேலும் செய்திகள்