Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-09-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-09-2022) | Morning Headlines | Thanthi TV
x

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு... போருக்கான காலம் இதுவல்ல என, மோடி பேச்சு...

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் கல்வியை தொடர வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...

மின்கட்டண உயர்வை கண்டித்து, செங்கல்பட்டில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம்... வரிகளை உயர்த்தி பொதுமக்கள் மீது சுமைகளை அதிகரித்துள்ளது, திமுக அரசு என விமர்சனம்...

ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி... அதிமுக ஆட்சியில் நடந்த கொள்ளைகள் குறித்து ஆதாரம் உள்ளது - விவாதிக்க தயாரா என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால்...

இந்துக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி கையெழுத்து இயக்கம்.... ஆ.ராசாவுக்கு முதல்வர் கண்டனம் தெரிவிக்காத‌து வேதனை அளிப்பதாகவும் தமிழக பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் பேட்டி...

விசைத்தறிக்கு மின் கட்டணத்தை குறைக்கும் வரை மின் கட்டணத்தை செலுத்த போவதில்லை... தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு...

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல்... விமான கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட கடத்தியது அம்பலம்...




Next Story

மேலும் செய்திகள்