Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2022) | 1 PM Headlines | Thanthi TV
x

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறிய நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்.... அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை...

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்து நிகழ்ந்த இடத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு... கோயில் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை...

டெல்லியில் குரங்கம்மை அறிகுறிகளுடன் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி... ஏற்கனவே குரங்கம்மை பாதிப்புடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்...

இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு.... நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பார்மா உள்ளிட்டோர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவை அமைத்தது மத்திய அரசு....

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை... அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை... திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு...

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் பங்கேற்பு.... ஈபிஎஸ் தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமனும், ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜும் பங்கேற்பு...


Next Story

மேலும் செய்திகள்