ஆர்டர் செய்தவருக்கு... "பிரெட் உடன் உயிரோடு எலி டெலிவரி"... அதிர்ந்து போன வாடிக்கையாளர் !

x

பிளிங்கிட் செயலி மூலம் ஆர்டர் செய்தவருக்கு பிரெட் பாக்கெட்டில் உயிருடன் எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விக்கி, சொமேட்டோ போன்று உணவு ஆர்டர் செய்யும் செயலியான பிளிங்கிட்டில் நிதின் அரோரா என்பவர் பிரெட் பாக்கெட்டை ஆர்டர் செய்துள்ளார். சில நிமிடங்களில் டெலிவரி ஊழியர் பிரெட் பாக்கெட்டை கொண்டு வந்து நிதின் அரோராவிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கி பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டெலிவரி ஊழியர் கொடுத்த பிரெட் பாக்கெட்டில் உயிருடன் எலி இருந்ததை பார்த்த அரோரோ அதிர்ச்சியில் உறைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்