"கூட்டுறவு சங்க இடத்தில் பள்ளி கட்டிடம்" - எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

x
  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் உள்ள அரசு ஒன்றிய துவக்க பள்ளியில் 71 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 கூடுதல் வகுப்றைகள் கட்டுவதற்கு கடந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
  • இதையடுத்து வருவாய்த் துறையினர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தினை அளவீடு செய்து அங்கு கட்டிடம் கட்ட பணிகளை மேற்கொள்ள ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி கொண்டிருந்தபோது அங்கு வந்த கூட்டுறவு சங்க தலைவர் குமார் மற்றும் திமுகவினர் சிலர் , கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் பள்ளி கட்டிடம் கட்டக்கூடாது என கூறி ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
  • இதனால் அனைத்து பணிகளும் பாதியிலே நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
  • இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்