கூடுதல் விலையை தட்டிக்கேட்ட மது பிரியருக்கு ஆபாச அர்ச்சனை - வைரலாகும் வீடியோ

x

அரசு மதுபான கடையில் வாடிக்கையாளரை ஆபாசமாகவும், ஒருமையிலும் திட்டும் விற்பனையாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ரெண்டேரிப்பட்டு கூட்டுச் சாலை அருகே அரசுக்கு சொந்தமான மதுபான கடையில், வாடிக்கையாளர் ஒருவர் மதுவாங்க முற்படும் போது விலை அதிகமாக விற்பதாகக் கூறி விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது... வாடிக்கையாளர் பில் கேட்டதற்கு அதைத் தராமல் விற்பனையாளர் ஆபாசமாகவும் ஒருமையிலும் அவரைத் தரக்குறைவாக திட்டிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்