கைவிடப்பட்ட 1,333 ஆழ்துளை கிணறுகள் - நீலத்தடி நீர்மட்டத்தை 14 நாட்களில் உயர்த்தி சாதனை...

x

திருவண்னாமலையில், கைவிடப்பட்ட ஆயிரத்து 333 ஆழ்துளை கிணறுகளின் நீலத்தடி நீர்மட்டத்தை 14 நாட்களில் உயர்த்தி சாதனை படைத்த குழுவுக்கு ஆட்சியர் தலைமையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சுற்றுச்சூழலையும், பசுமையையும் பாதுகாக்க பண்ணை குளங்கள் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருவண்ணாமலையில் கைவிடப்பட்ட ஆயிரத்து 333 ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் உயர்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார், 6 கோடியே 65 ரூபாய் செலவில் 14 நாட்களில் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மீள் நிரப்ப கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறுகிய காலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்ட எலைட் வேர்ல்ட் ரெக்காட்ஸ், ஏசியன் ரெகார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களுக்கு ஆட்சியர் முருகேஷ் உலக சாதனை விருதும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்