நடுகாட்டில் சடலமாக கிடந்த மனைவி... சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்...

x

திருச்சி - பொன்மலை

நடுகாட்டில் சடலமாக கிடந்த மனைவி...

சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்...

சந்தேக புத்தியால் நிர்மூலமான குடும்பம்...

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்...

என்ன தான் உருகி உருகி காதல் திருமணம் செஞ்சுகிட்டாலும், அந்த மண வாழ்கையில சந்தேகம் என்னும் சாத்தான் புகுந்துட்டா அந்த வாழ்கையே நரகமா மாறிடும். இங்கயும் அப்படி தான் சந்தேகத்தால ஒரு குடும்பம் சீரழிந்து போயிருக்கு.

எப்போதும் காட்டு விலங்குகள் நடமாடும் அந்த காட்டுப்பகுதி அன்று இரவு காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது.

நீண்ட நேர விசாரணைக்கு பிறகு… காட்டுப்பகுதியிலிருந்து அந்த மர்ம பொருளை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

ஆம், அந்த மர்ம பொருள்... ஒரு பெண் சடலம்…

தலை சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலைச் செய்யப்பட்டிருக்கிறார் அந்த பெண்.

சம்பவ இடத்திலிருந்து சடலத்தை கைப்பற்றிய சூட்டோடு காவல்துறை விசாரணையை தொடங்கியது. அதில் கிடைத்த தகவல்கள் போலீசாரையே கதிகலங்கச் செய்தது

சடலமாக மீட்கப்பட்டவர் சபுராபீவி. 35 வயதாகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். வீட்டை எதிர்த்து காதலனை கரம்பிடிக்க நினைத்த சபுராபீவி… காதலன் இந்து என்பதால் அவர் விருப்பப்படியே இந்துவாக மாறி காதல் திருமணம் செய்திருக்கிறார். அன்றிலிருந்து அவர் நிஷாவாக மாறியிருக்கிறார்.

பல போராட்டங்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த இவர்களின் காதலுக்கு சாட்சியாக இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

பெயிண்டிங் வேலையில் குறைந்த சம்பளம் கிடைத்தாலும் மனைவி பிள்ளைகளை சதீஷ்குமார் சந்தோஷமாகதான் கவனித்து வந்திருக்கிறார். ஆனால், நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சதீஷ்குமார் குடும்பத்தை சரிவர கவனிக்காமல் பொறுப்பற்ற கணவராக மாறியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கணவரின் செயல்கள் நிஷாவிற்கு வாழ்க்கை மீது வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கணவரிடம் பழைய மாதிரி அன்பாக பழகாமல் விலகிச் செல்ல தொடங்கியிருக்கிறார். ஆனால், மனைவியின் மாற்றத்தை சதீஷ்குமாரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

நிஷா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதால்தான் தன்னை வெறுத்து ஒதுக்குவதாக மனகணக்கு போட்டிருக்கிறார்.

அதன்படி நிஷா அடிக்கடி போனில் பேசுவதை நோட்டமிட்டு அவர் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்வில் இருப்பதாகவே ஆத்மார்த்தமாக நம்பியிருக்கிறார் சதீஷ்குமார்.

சந்தேக சாத்தான் சதீஷ்குமாரை ஆட்டி படைக்க, நிஷாவின் மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.

சம்பவத்தன்று நிஷாவிடம் சந்தோஷமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறிய சதீஷ்குமார் அவரை பொன்மலை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கள்ளக்காதல் விவகாரம் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்சியாக மனைவியை தாக்கிய சதீஷ், தலையில் கல்லை போட்டு அவரை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

நீண்ட நேரமாகியும் நிஷா வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை கைதுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சதீஷ்குமாரின் சந்தேகம் அவர் மனைவியின் உயிரை பறித்து மட்டுமல்லாமல் மூன்று குழந்தைகளையும் அநாதையாக்கி விட்டது.



Next Story

மேலும் செய்திகள்