"தோனிக்காக என்னைய அவுட்டாக சொல்றாங்க" - ஜாலியாக கமெண்ட் அடித்த ஜடேஜா

x

தோனி களம் இறங்க வேண்டும் என்பதற்காக தான் அவுட் ஆக வேண்டும் என ரசிகர்கள் விரும்புவதாக சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா கலகலப்பாக பேசி உள்ளார். வெற்றிக்குப் பிறகு பேட்டியளித்த ஜடேஜா, முன்வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினால், தோனியை வரச்சொல்லி ரசிகர்கள் கோஷம் எழுப்புவதாகக் கூறினார். கேப்டன் தோனி களமிறங்க வேண்டும் என்பதற்காக, தான் ஆட்டமிழக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருப்பதாகப் பேசிய ஜடேஜா, அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவேன் எனக் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்