"அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போல" - தங்கையின் நினைவு நாளில் சிம்ரன் உருக்கம்

x

நடிகை சிம்ரன் தனது தங்கை மோனலின் நினைவு நாளை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 90-களின் கால கட்டத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். இவரது தங்கை மோனல், 2001 ம் ஆண்டு "பார்வை ஒன்றே போதுமே" படத்தின் மூலம் கதாநாயகி அறிமுகமாகி பிரபலமானார். தொடர்ந்து விஜயின் 'பத்ரி' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், 2002 ம் ஆண்டு தற்கொலை செய்தார். இந்நிலையில், தனது தங்கையின் நினைவு நாளில், சிம்ரன் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், உன் நினைவுகளை ஒரு போதும் மறக்க முடியாது மோனல் என கூறி சிறுவயதில் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்