ஜாலியாக நடந்து சென்ற இளைஞர்கள்.. அப்படியே பின்னால் இடித்து தூக்கிய பைக்! - வெளியான பகீர் சிசிடிவி காட்சி

x

நீலகிரி மாவட்டம் உதகையில், சாலையில் நடந்த சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது இருசக்கர வாகனம் மோதியதில், இருவர் தூக்கி வீசப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. தாவரவியல் பூங்காவுக்கு செல்லும் பிரதான சாலையில் சுற்றுலா பயணிகள் இருவர், சாலையோரமாக நடந்து சென்றனர். அப்போது பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம், திடீரென அவர்கள் மீது மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தடுப்பு வேலியில் மோதி கீழே விழுந்தார். காயமடைந்த கேரளாவை சேர்ந்த அஸ்கர், வசிம் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நவீன் ஆகியோர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்