3 இனத்தை சேர்ந்த நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க உத்தரபிரதேச அரசு தடை விதித்துள்ளது.

x

வளர்ப்பு நாய் கடிக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக, பிட்புல் உள்ளிட்ட 3 இனத்தை சேர்ந்த நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க உத்தரபிரதேச அரசு தடை விதித்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் லிப்டில் சென்ற நபரையும், குடியிருப்பு வளாகத்தில் சிறுவனையும் வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிட்புல் வகை நாய் கடித்தத்தில் சிறுவனின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டன. இந்த நிலையில், வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகளை காசியாபாத் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிட்புல், ரோட்வெய்லர், டோகோ அர்ஜென்டினோ வகை நாய்களை செல்ல பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் ஒரு நாய் மட்டுமே செல்ல பிராணியாக வளர்க்க வேண்டும், நாய் வளர்ப்பதற்கான லைசென்ஸை மாநகராட்சியில் இருந்து பெற்றிருக்க வேண்டும், வெளியே அழைத்து வரும் நாய்களுக்கு அதன் வாய்ப்பகுதியில் கண்டிப்பாக வாய்மூடி அணிந்திருக்க வேண்டும் போன்ற கடுமையாக கட்டுப்பாடுகளை காசியாபாத் மாநகராட்சி விதித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்