கோலாட்டம் ஆடிய மத்திய அமைச்சர்... வியந்து பார்த்த சேலம் மக்கள்

x

சேலத்தில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் பெண்களுடன் இணைந்து கோலாட்டம் ஆடி அசத்தினார்...சேலம் மாநகரில் பாண்டு ரங்கநாதர், பிரசன்ன வரதராஜ பெருமாள், சவுராஷ்ட்ரா மாரியம்மன் ஆகிய 3 கோயில்களில் அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், குஜராத் மாநில கைத்தறித்துறை அமைச்சர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, காந்திநகர் ஆட்சியர் பிரவீனா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சவுராஷ்ட்ரா தமிழ் சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. குறிப்பாக சவுராஷ்ட்ரா மக்களின் பாரம்பரிய முறைப்படி மண்விளக்கு ஏற்றி மத்திய இணையமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் கோலாட்டம் ஆடி ஊர்வலமாக வந்தபோது தர்ஷனா ஜர்தோஷ், ஜெகதீஷ் விஸ்வகர்மா ஆகியோரும் அவர்களுடன் இணைந்து கோலாட்டம் ஆடி வியப்பை ஏற்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்