"வருங்கால தங்கங்களே..." - முதல்வரை பாராட்டி பாடல் பாடிய கள்ளக்குறிச்சி மாணவிகள்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள கோமுகி மலைவாழ் மேல்நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்போது பள்ளி மாணவிகள் தமிழக அரசின் நலத்திட்டங்கள் பற்றியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியும் கானா பாடல்களை பாடி அசத்தினர். மாணவிகள் கானா பாடல் பாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்