"தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை தான் உங்களுக்கும்" - முரசொலி பகீரங்க எச்சரிக்கை

x

வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நல சட்டங்களுக்கு தடை ஏற்படுத்த நினைத்தால், ஆளுநர்கள் அவலங்களை சந்திக்க நேரிடும் என முரசொலி நாளிதழில் கட்டுரை வெளியாகி உள்ளது.

தனக்கு உரிய மரியாதையை தெலுங்கானா அரசு தரவில்லை என்பது தெலுங்கானா ஆளுநரின் ஆதங்கம் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் நோக்கோடு ஆளுநர் செயல்படுவதாக தெலுங்கானாவின் ஆளும் அரசு பல நேரங்களில் ஆளுநர் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளது என்றும், சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் தமிழிசை பேட்டியை சுட்டிக்காட்டி முரசொலி நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், ஒன்றிய அரசின் அரசியல் நியமனமாக விளங்கும் ஒற்றை நபர், வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலச் சட்டங்களை தடுத்து நிறுத்தி காலதாமதப்படுத்தி, அதிலே அரசியல் செய்வதை எந்த அரசு தான் ஏற்கும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இரண்டு அதிகார மையங்களின் மோதலில் மக்கள் துன்பப்பட கூடாதே என்ற நல்லெண்ணத்தில் மாநில அரசு விட்டுக் கொடுத்துப் போக நினைக்கலாம் எனவும் இந்த மோதல் போக்கு நீடித்தால், ஆளுநர் தமிழசைக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம் என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்