குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீர்... சேறும், சகதியுமாக வருவதால் பொதுமக்கள் அவதி

x

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை... அணையின் நீர் மட்டம் 34 அடிக்கும் கீழ் சென்ற நிலையில், குடிநீருக்காக திறக்கப்படும் போது சேறும் சகதியும் கலந்து வெளியேறி வருகிறது. கடந்த சில நாட்களாக பெரியகுளம் நகராட்சியில் வழங்கப்படும் நீர் கலங்கிய நிலையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அணையில் 20 அடி வரையில் மண்ணும், 11 அடி வரையிலும் மட்டுமே நீர் உள்ள நிலையில், குடிநீருக்காக 7 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட

25 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனிடையே சேறும் சகதியுமாக வெளியேற்றப்படும் தண்ணீரை முழுமையாக சுத்திகரிக்கப்பட முடியாத நிலையில், வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாகவும், காய்ச்சியும் குடிக்குமாறு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்