மீண்டும் உச்சத்தை தொட்ட தக்காளி விலை...அதுக்குன்னு இவ்ளோவா ? மக்கள் கடும் அவதி

x

வரத்து குறைந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை சதம் அடித்தது. இதனையடுத்து, சற்று குறைந்த தக்காளியின் விலை, கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தக்காளியின் விலை ஒரே நாளில் 15 ரூபாய் உயர்ந்து மொத்த விற்பனையில் 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புறநகர்ப் பகுதிகளில் சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி, 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தக்காளி விலை மீண்டும் உயர்ந்து இருப்பதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்