"நீங்க பண்ணது ரொம்ப தப்பு"... பூசாரியை அடித்து உதைத்த பெற்றோர்

x

"நீங்க பண்ணது ரொம்ப தப்பு"... பூசாரியை அடித்து உதைத்த பெற்றோர்


சென்னை மதுரவாயலில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பூசாரியை போலீசார் தேடி வருகின்றனர். கந்தசாமி நகரைச் சேர்ந்த சந்திரசேகர், அதே பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக உள்ளார்.


அங்கு வந்த பெண் ஒருவரிடம், அவரது 14 வயது சிறுமிக்கு சுற்றிப்போட வேண்டும் என கூறி, அழைத்துச் சென்று தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், பூசாரியை பெற்றோர் சரமாரியாக தாக்கியதால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து சந்திரசேகர் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்