காதல் மன்னனாக வலம் வந்த புதிய மன்னர்.. மக்களின் கோபத்திற்கு ஆளான சார்லஸ்.. டயானாவிற்கு பின் கமிலா..சார்லஸின் தெரியாத முகங்கள்..

x

பிரிட்டனில் ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட.... அதற்கும் மேல் அதிகாரம் படைத்த மன்னராட்சி இன்றளவும் நடைமுறையில் இருக்க முக்கிய காரணம்... ராணி எலிசபெத் மீது மக்கள் கொண்டிருந்த பேரன்பு தான்..!

ஆனால் அதே அன்பை புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பெறுவாரா என்பது சந்தேகம் தான்.. காரணம் பல அரச குடும்ப மரபுகளையும் மீறிய செயல்பாடுகள் என பல சர்ச்சைக்கு பெயர் போன இளவரசர் சார்லஸை மறப்பது அவ்வளவு சுலபம் அல்ல..!

இங்கிலாந்து ராணியின் அரசியல் பார்வை என்ன? என்பது யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது... ஆனால் சார்லஸோ இளவரசராக இருக்கும் போதே பல அரசியல் தலையீடுகளால் கண்டத்திற்கு ஆளானவர்.

தலாய் லாமா மீது கொண்ட அன்பினால் சீன அதிபரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது... ஜிம்பாபேவின் சர்வாதிகாரியை ஐரோப்பிய ஒன்றியமே ஒதுக்கி வைத்த நிலையில், போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பாலின் இறுதிச்சடங்கின் போது அவருடன் கை குலுக்கியது... என சர்ச்சை பட்டியல் நீளுகிறது.

இதோடு ராணியே பிரிட்டனின் அரசியலில் தலையிடாத நிலையில், தனிப்பட்ட முறையில் பிரிட்டன் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இளவரசர் சார்லஸ் எழுதிய கடிதங்கள்... அவரது கையெழுத்துடன் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

இதோடு, தனது தொண்டு நிறுவனத்திற்கு ஒசாமா பின்லேடனின் குடும்பத்திடம் இருந்து நன்கொடை பெற்றதாக வெளியாகிய செய்தி... அவர் மீதான மதிப்பை களங்கப்படுத்தியது.

பெரும் பணக்காரர்கள் தங்களின் சொத்துக்களை எப்படி எல்லாம் பதுக்குகிறார்கள் என வெளியான ஆய்வு கட்டுரையில்... இளவரசர் சார்லஸுக்கு சொந்தமான எஸ்டேட் மறைமுகமாக முதலீட்டாளர்களை ஈர்த்து வருவது தெரியவந்து.. சர்ச்சையை ஏற்படுத்தியது..


Next Story

மேலும் செய்திகள்