மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அருமையான கன்டென்ட் கொடுத்துள்ள புதிய ஐபோன் 14

x

ஐபோன் 14 வகை போன்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் தெரிக்கவிடப்படுகின்றன. ஐபோன் புதிய வகை செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளன. அதே நேரத்தில், பல பெயர்களில் அறிமுகப்படுத்தப் பட்டாலும், அவற்றில் எந்த வித்தியாசமும் இருக்காது என்பது போன்று, மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன. ஐபோன் 13 மாடலுக்கே மாத‌த் தவனை கட்டி முடிக்காத நிலையில், புதிய மாடலா? என்று ஐபோன் விரும்பிகள் கேட்பது போன்றும் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்